Skip to content
Home » வரகூரில் கிருஷ்ணலீலா தரங்கிணி மகோத்சவம்…

வரகூரில் கிருஷ்ணலீலா தரங்கிணி மகோத்சவம்…

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூரில் கிருஷ்ணலீலா தரங்கிணி மகோத்சவம் நடந்தது. இதில் பல்வேறு இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தரங்க இசை பாடி வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோயில் ஸ்ரீநாராயணதீர்த்தர் என்ற மகான் ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி என்ற அற்புதமான பாடல்களை பாடியபோது சுவாமி தானும் நர்த்தனம் ஆடி அதனை ஏற்றுக் கொண்ட திருத்தலம் ஆகும். இதனை நினைவு கூறும் வகையில் இங்கு கடந்த 13 ஆண்டுகளாக கிருஷ்ணலீலா தரங்கிணி மகோத்சவம் நடந்து வருகிறது. 14வது ஆண்டு மகோத்சவத்தை முன்னிட்டு நேற்று (26ம் தேதி) காலை 7. 15 மணிக்கு ஸ்ரீநாராயண தீர்த்தரின் திருஉருவப்படம் தரங்கிணி பாடல்களுடன் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலயத்தில் சத்குரு ஸ்ரீநாராயணதீர்த்தர் பஜன்மண்டலியின் நாமசங்கீர்த்தனம் நடந்தது. காலை ஒன்பதரை மணிக்கு வரகூர் பாகவதர்களும் அதைத் தொடர்ந்து 11 மணிக்கு கடலூர் ஸ்ரீ கோபி பாகவதர் குழுவினரும், மதியம் 2 45க்கு சென்னை ஸ்ரீரஞ்சனி கௌசிக் குழுவினரும், 4. 30 மணிக்கு சென்னை ஸ்ரீஅஸ்வின் பாகவதர் குழுவினரும், மாலை 7 மணிக்கு சென்னை ஸ்ரீ சாகேதராமன் குழுவினரும் தரங்கிணி பாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *