தஞ்சை அருகே உள்ள பனங்காடு கோரிக்குளம் புது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் ( 42). இவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று மகேந்திரன் மாரியம்மன் கோவிலில் கடலை வியாபாரம் செய்தார். பின்னர் வியாபாரத்தை முடித்துக் கொண்டு தள்ளுவண்டியில் வீட்டிற்கு புறப்பட்டார்.
மாரியம்மன் கோவில் சமுத்திரம் ஏரி அருகில் வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் இறந்தார். இது குறித்து அவரது மனைவி ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.