தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் காவல் சரக்கத்திற்குட்பட்ட பாதிங் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யனார் கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது பொதுமக்கள் தங்கள் கோயில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டதாகவும்
உடைத்து அள்ளி உடனே கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.அதன் அடிப்படையில் அருணாச்சலம் என்பவர் கொடுத்த புகார் பேரில் திருவோணம் போலீசார்கோபாலகிருஷ்ணன்,செல்வராஜ்,அழகு நந்தகுமார் ஆகிய மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.