தஞ்சை, மானம்புச்சாவடி சின்ன அரிசிக்கார தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மகன் அய்யப்பன் (34). இவர் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனவேதனையில் இருந்து வந்த அய்யப்பன் கடந்த 18ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அய்யப்பனின் மனைவி அரியலட்சுமி கிழக்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அய்யப்பன் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
