Skip to content
Home » தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

தஞ்சை-பேராவூரணி அருகே பனை விதைகள் நடும் விழா..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வெளிவயல் கிராமத்தில், பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி, தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் சுமார் 3 ஆயிரம் பனை விதைகள் கடற்கரை, நீர்நிலைகள், பொது இடங்களில் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபூர்வ வகை உயிரினமான கடல்பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். வனவர் சிவசங்கர், ஓட்டுநர்

சண்முகம், வேட்டைத் தடுப்பு காவலர்கள், ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் பாலாஜி, மேலாளர் அன்பு, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர், மாணவர்கள், நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!