தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் தவபிரபு. இவரது மகன் ரித்திக் ரோஷன் (15). இவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை ரித்திக் ரோஷன் பைக்கில் கரந்தைக்கு வந்து அரிசி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பினார்.
வெண்ணாறு பாலத்தில் திருக்கருக்காவூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் ரித்திக் ரோஷன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரித்திக்ரோஷன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அறிந்த தஞ்சாவூர் நகர போக்குவரத்து விசாரணை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவன் ரித்திக் ரோஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விபத்து நடந்தது குறித்து அறிந்த போலீசார் வெகு தாமதமாக வந்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது மக்கள் மத்தியில் பொதுமக்கள் அதிருப்தியை ஏற்படுத்தியது.