Skip to content
Home » போக்குவரத்து கழகங்களில் 7 பேருக்கு பதவி உயர்வு.. 5 பேர் பணியிட மாற்றம் …தமிழக அரசு உத்தரவு..

போக்குவரத்து கழகங்களில் 7 பேருக்கு பதவி உயர்வு.. 5 பேர் பணியிட மாற்றம் …தமிழக அரசு உத்தரவு..

போக்குவரத்துக் கழகங்களில் 7 துணை மேலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும்,  5 பொது மேலாளர்களை பணியிடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள  உத்தரவில், “அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல பொது மேலாளர் சி.கே.ராகவன், கடலூர் மண்டலத்துக்கும், வேலூர் மண்டல பொது மேலாளர் ஜெ.எட்வின் சாமுவேல், விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கும், கடலூர் மண்டல பொது மேலாளர் எஸ்.ராஜா, நாகப்பட்டினம் மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஈரோடு மண்டல பொது மேலாளர் கே.ஸ்வர்ணலதா, கோவை போக்குவரத்துக் கழகத்துக்கும், உதகை மண்டல பொது மேலாளர் ஏ.கணபதி, வேலூர் மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், துணை மேலாளர் பொறுப்பில் உள்ள 7 பேருக்கு முதுநிலை துணை மேலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர்கள் பொது மேலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை போக்குவரத்துக் கழக தொழில்நுட்பப் பிரிவு பொது மேலாளராக வி.கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி மண்டல பொது மேலாளராக பி.பாலசுப்பிரமணியன், விழுப்புரம் மண்டல பொது மேலாளராக டி.சதீஷ்குமார், சேலம் போக்குவரத்துக் கழக தொழில்நுட்ப பிரிவு பொது மேலாளராக எஸ்.கலாவதி, திருப்பூர் மண்டல பொது மேலாளராக வி.சிவக்குமார், மதுரை மண்டல பொது மேலாளராக பி.மணி, காரைக்குடி மண்டல பொது மேலாளராக எஸ்.பி.கந்தசாமி ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!