தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று வருகிறது, இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பாராட்டு சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது, இவ் விழாவினை மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பழங்கள், இனிப்புகள், மலர்மாலைகள் கொண்ட சீர்வரிசை தட்டுக்களை மேளதாளம், தப்பாட்டம் முழங்க, சுகாதார மருத்துவத்துறை
பணியாளர்கள் தஞ்சையின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு சென்று கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சென்றடைந்தனர். பின்னர் நடைபெற்ற விழாவில் டாக்டர் முத்துக்குமாருக்கு மலர் கீரீடம் சூட்டி 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினருக்கு அவர்களது சேவையை பாராட்டி மாலை அணிவித்து மேயர் உள்ளிட்டோர் கௌரவித்தனர், இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி உள்ளிட்ட டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.