தஞ்சை மாவட்டம் சீராளூர் காளியம்மன் கோயில் தெருவில் ரூ. 11.97 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து சீராளூரில் நடந்த நிகழ்ச்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ஊராட்சி தலைவர் செந்தில்குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ரோசாலி மேரி, ஊராட்சி செயலர் சசிகுமார் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.