தஞ்சை மாவட்டம் திருவையாறில் புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூந்துருத்தியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது… அரசு அதிகாரத்திற்கு கட்டுப்பட்டுதான் பெரிய ஊடகங்கள் இயங்குகின்றன. இந்த காட்சிகளை யூடியூபில் பார்த்த யாருமே பதறாமல், துடிக்காமல் இருந்து இருக்க முடியாது. அரசு பயிர்களை கொல்வதாக நினைக்கிறது. பல கோடிக்கணக்கான உயிர்களை கொன்று படுகொலை செய்து இருக்கு அரசு.
இந்த புறவழிச்சாலை மணலை திருடிக்கொண்டு செல்ல பயன்படுகிறதே தவிர மக்களின் பயன்பாட்டுக்கான இந்த சாலையை பயன்படுகிறதா என்பதுதான் கேள்வி. இதை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மனச்சாட்சியுடன் சொல்லட்டும். மக்களின் பயன்பாட்டுக்கு இந்த பாதை பயன்படுமா? மணல் திருட்டுக்காக போடப்பட்டதா? விளைநிலத்தை மூடிவிட்டு நீங்கள் சாலை போட்டு விட முடியும். சாலையை அழித்து விட்டு மீண்டும் விளை நிலமாக்க முடியுமா? பட்ஜெட்டில் பயிர் விளையுமா? பட்ஜெட் போட்டு 2 வருடம் ஆகிறது. ஏதாவது மாறுதல் வந்துள்ளதா? விளைநிலத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறீர்களா? நூறுநாள் வேலைத்திட்டத்தில் உழைப்பிலிருந்து எங்கள் மக்களை வெளியேற்றி விட்டீர்களா? இல்லையா? வட இந்தியாவில் இருந்து தஞ்சைக்கு வந்து நாற்று நட்டு கொண்டு இருக்கிறார்களா இல்லையா? இது எவ்வளவு ஆபத்தான நிலை போக்கு என்று தெரிகிறதா இல்லையா? இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக அரசு இதுவரைக்கும் வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யவில்லையே. அதிகாரத்திற்கு வரவில்லை என்றாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் தான் செய்தார். அதற்கு பின்னர் எப்படி தனி பட்ஜெட் வரணும் சொன்னது நாங்கள். அதற்கு பின்னர்தான் நீங்கள் தனி பட்ஜெட் போட்டீர்கள். விளைச்சலுக்கு வந்த நெல்லை மூடி மண்ணை கொட்டி பாதை போட்டுவிட்டு தனி பட்ஜெட் போடுவதால் என்ன பயன். இது படுபாதகச் செயல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.