தஞ்சாவூரில் வீரராகவ மேல்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும். இந்நிலையில் பள்ளியில் மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளிச் செயலர் தனசேகரன் தலைமை வகித்தார். கருத்தாளர்கள் டாக்டர் பிரான்சிஸ், பீட்டர், ஜான்பால், மனநல மருத்துவர் ரேவதி, சிறுநீரக மருத்துவர் மோகன்தாஸ் மற்றும் கேரன் லூயிஸ் கலந்துகொண்டு புகையிலையால் ஏற்படும் தீங்குகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு அறிவுரை வழங்கினர். பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் சூர்ய பிரகாஷ் , ஆசிரியர், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் புகையிலை நமக்கு பகை இலை, உனக்கு என்னை கொடுப்பேன், எனக்கு உன்னை கொடு என்ற பதாகைகளை ஏந்தியவாறு அமர்ந்திருந்தனர்.
தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்து விழிப்புணர்வு…
- by Authour
