தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புதுத்தெருவைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் தினேஷ் என்ற மண்டை தினேஷ் (28). பிரபல ரவுடி. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பல்வேறு கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து போன்ற பல வழக்குகள் பாபநாசம், கபிஸ்தலம் அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் நிலுவையில் இருந்து வந்தது. கடந்த 6 மாதங்களாக ஒரு கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் தினேஷ் திருவிடைமருதூர் பகுதியில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் பாபநாசம் துணை கண்காணிப்பாளர் பூரணி உத்தரவின் பேரில் தனிப்படை உதவி ஆய்வாளர் முத்துக்குமார், ராஜேஷ்குமார், தலைமை காவலர் பிரபு, காவலர்கள் விஜயகுமார், பிரபாகர், சந்தோஷ் ஆகியோர் அடங்கிய தனிப்பாடை அமைத்து திருவிடைமருதூர் அருகே கரிக்குளம் பகுதியில் பதுங்கி இருந்த தினேஷ் சுற்றி வளைத்து கைது செய்து பாபநாசம் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.