தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 2 பேர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக மருத்துவ கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலையை சேர்ந்த மணிகண்டன் (வயது 35), கிருஷ்ணகுமார் (22) என்பதும், இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள உள்ளதும், பிரபல ரவுடிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கிருஷ்ணகுமார் ஆகிய 2 ரவுடிகளையும் கைது செய்தனர்.
