தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி ஆலோசனையின் பேரில், பாபநாசம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபக் மேற்பார்வையில் அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி புத்தூர் கிராமத்தில் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப் பெற்றது. முகாமில் கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜன் 70 பேரிடம் கண் பரிசோதனை மேற்க் கொண்டார். இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 20 பேரை கண்ணில் அறுவைச் சிகிச்சை மேற்க் கொள்ள தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தார். இதில் ஊராட்சித் தலைவர் ஜெய் சங்கர், துணைத் தலைவர் இந்திரா காந்தி, முன்னாள் துணைத் தலைவர் கணேசன், சுகாதார ஆய்வாளர் நாடிமுத்து உட்பட பங்கேற்றனர்.