தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இவ்வலுவலக வளாகத்திலேயே வரும் 6 மற்றும் 7ம் தேதி காலை 10 மணியளவில் நடத்தப்பட உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் ஒசூரில் இயங்கிவரும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 2000க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பெண் பணியாளர்களை மட்டுமே தேர்வு செய்ய உள்ளது.. மேலும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் 19 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்கள் கலந்து கொள்ளலாம். மேலும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் (Electronics Manufacturing Sector) ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்நேர்காணலில் தேர்வான நபர்களுக்கு மாதம் ரூ.19,629 ஊதியம் வழங்கப்படும். மேலும் உணவு மற்றும் தங்குமிட வசதியும் ஏற்படுத்தி தரப்படும்.