தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பணியில் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பணியாற்றினர். தற்போது அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த 1981-ம் ஆண்டு பேட்ஜ் ஓய்வு பெற்ற காவலர்கள் தஞ்சையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதற்கு தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். வழிகாட்டு குழுத் தலைவர் சுப்ரமணி, செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர்கள் அருள்மொழிவர்மன், குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி 45-வது சங்கம விழா, குடும்ப விழாவை தஞ்சையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஓய்வு பெற்ற காவலர்கள் கலந்து கொண்டனர்