தஞ்சை பெரிய கோவிலை கட்டி உலகுக்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது அரசு விழாவாக கொண்டாடப்பட்டு 1039 சதய விழா நேற்று தொடங்கி இன்று இரவு வரை நடைபெறுகிறது. நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கிய சதய விழாவில் திருமுறை பாடல் கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில்
முக்கியமாக தஞ்சை பெரிய கோவில் வளாகம் முழுவதும் பழங்கால இசை கருவிகளோடு நாட்டிய கலைஞர்கள் பங்கு பெறும் மாமன்னன் ராஜராஜ சோழன் விஜயம் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 700க்கும் மேற்பட்ட நாட்டிய மாணவிகள் பங்கேற்றனர். இன்று சதய விழாவை முன்னிட்டு ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் ,ராஜராஜன் விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.