தமிழ்நாடு அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில்தஞ்சை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது .பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டுவிழா விற்க்கு பிறகு உலகம் முழுவதிலும் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்நாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் மதுரைக்கு அடுத்து தஞ்சை இரண்டாம் இடம் வகிக்கிப்பது பெருமை அளிக்கிறது என்றார். உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா துறை சார்பில் மாலை அணிவித்து, நாதஸ்வர இசையுடன் உற்சாக
வரவேற்பு அளித்தனர். வேளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தஞ்சை மாவட்டம் முதலிடம் வகிப்பதாக சுற்றுலா துறையினர் பெருமிதம் கொண்டனர். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27 ம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது..அந்த வகையில் தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழுமம், மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட துணை ஆட்சியர் உத்கர்ஷ் குமார் தலைமையில், உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகை தந்த வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு நாதஸ்வர இசையுடன் ,மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.