Skip to content

தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து, மஹரசங்கராந்தி எனப்படும் மாட்டு பொங்கலான நேற்று பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

பிறகு காலை கோவில் வளாகத்தில், உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு காய்கறிகள், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்கள், லட்டு,

அதிரசம், ஜாங்கிரி, முறுக்கு என பலவகையான இனிப்பு பதார்த்தங்கள் மற்றும் மலர்கள் என சுமார் இரண்டாயிரம் கிலோ எடையிலான பொருட்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, நந்தியம் பெருமானுக்கு முன்பாக, 108 பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டு துணி போர்த்தப்பட்டு கோ பூஜைகள் நடந்தது.

விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணைத் தலைவர் மேத்தா மற்றும் கோவில் பணியாளர்கள், ஏராளாமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நந்தியம் பெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

error: Content is protected !!