தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே வன்னியடி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பட்டு புழு வளர்ப்பு தொழிற் நுட்ப பயிற்சி நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா கலந்துக் கொண்டு பேசினார். இதில் தட்டுமால் படுகையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி முருகேசன் கலந்துக் கொண்டு பட்டுபுழு வளர்க்கும் முறை, மல்பெரி சாகுபடி முறைகள், மற்றும் விற்பனை வாய்ப்பு குறித்து விளக்கினார். இதில் விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கணபதி அக்கிரஹாரம் உதவி வேளாண்மை அலுவலர் சரவணன், அட்மா திட்ட தொழிற் நுட்ப மேலாளர் சிவரஞ்சனி உதவிதொழிற் நுட்ப மேலாளர்கள் ரஞ்சனி, பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.
