தஞ்சை வடக்குவாசல் ராஜகோரி சுடுகாடு அருகே மர்மநபர்கள் 2 பேர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியை காட்டி மிரட்டுவதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வடக்குவாசல் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் தமோதரன் (28), அதே பகுதியை சேர்ந்த சகாயம் மகன் ஆகாஸ் (26) என்பதும், பட்டாகத்தியை காட்டி, அந்த வழியாக சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டியதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்