தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறை முக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற் பார்வையாளர் பிரசாத் முன்னிலை வகித்தார். பருத்தி ஏலத்தில் கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 92 விவசாயிகள் சராசரியாக 91 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சார்ந்த 4 வணிகர்கள் ஏலத்தில் கலந்துக் கொண்டு அதிகப் பட்சம் குவிண்டாலுக்கு ரூ.6619, குறைந்தபட்சம் ரூ.5779, சராசரி ரூ.5989 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் சராசரி மதிப்பு 5 லட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது.