தஞ்சை மாவட்டம், கும்பகோணம் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் (தென்னூர்) பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் தாமஸ், பிரசாத் முன்னிலை வகித்தனர். பருத்தி மறைமுக ஏலத்தில் தென்னூர், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆக மொத்தம் 233 விவசாயிகள் சராசரி 350 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம்,தேனி, திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சார்ந்த 8 வணிகர்கள் ஏலத்தில் கலந்துக் கொண்டு அதிகப் பட்சம் குவிண்டாலுக்கு ரூ.7219, குறைந்தப் பட்சம் ரூ.6709, சராசரி ரூ.6989 என விலை நிர்ணயம் செய்தனர்.