தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் 1471 லாட் பருத்தி கொண்டு வந்து வைத்திருந்தனர். இந்த பருத்தி ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், குத்தாலம், சேலம், தேனி சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். வியாபாரிகள் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு 6469/- ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ. 5309/-ரூபாய்க்கும் கொள்முதல் செய்தனர். சராசரியாக 3089. 10 குவிண்டால் பருத்தியின் மதிப்பு சராசரியாக 1. 76 கோடி ரூபாய் ஆகும். தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடியை அதிகளவில் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.