தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி எடக்குடி கிராமத்தில் ஆதி திராவிட மக்களுக்கான சுடுகாடு இல்லாமல் இருந்தது. இந் நிலையில் எடக்குடியில் வசிக்கும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த துளசிராஜன் படுகையிலுள்ள தனக்குச் சொந்தமான 6 சென்ட் இடத்தை சுடுகாட்டிற்கென தந்தார். இதில் கொத்தங்குடி ஊராட்சி மன்றம் சார்பில் ரூ 20,000 செலவில் தூய்மை செய்யும் பணி நடந்தது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, துணைத் தலைவர் குமார், ஊராட்சிச் செயலர் ஸ்ரீதேவி உட்பட இருந்து தூய்மைப் பணியை பார்வையிட்டனர்.
