தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுச் சார்பில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கான மோடிவேட் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி லட்சுமி பிரியா தலைமை வகித்தார். இதில் விவேகானந்தா தொண்டு நிறுவனச் செயலர் கண்ணதாசன் பேசினார். அவர் பேசும் போது தேர்வை பதட்டமின்றி இயல்பாக எதிர் கொள்ள வேண்டும். தேர்வில் பெறும் மதிப்பெண் தான் எதிர் காலத்தை தீர்மானிக்கும். செல் போனையும், தொலைக் காட்சியையும் சம அளவில் தள்ளி வைக்க வேண்டும். பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மனதில் நிறுத்தி தேர்வை நம்பிக்கையுடன் எதிர் கொள்ள வேண்டும் என்றார். உறுப்பினர் மெர்ஜானா பேசினார். இதில் பள்ளி முது கலை ஆசிரியை கல்யாணி, பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் ஜாபர் அலி, ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு ஜியாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப் பட்டது.