தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருவைக்காவூர் துணை சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்கள் உட்கார முடியாமல் சிரமப்பட்டனர். இதையறிந்த திமுக ஒன்றியக் கவுன்சிலர் விஜயன் ரூ 10,000 மதிப்பிலான 10 சேர்களை தனது சொந்தப் பணத்தில் துணை சுகாதார நிலையத்திற்கு வழங்கினார். இதையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றியக் கவுன்சிலர் விஜயனை பாராட்டினர்.