தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமை தொகைக்கான வங்கி பற்று அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். மாநிலங்களவை எம்.பி., கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம், எம்எல்ஏக்கள் திருவையாறு துரைசந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் ஆகிோர் முன்னிலையில் வழங்கினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்,களஆய்வுநிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளான 7.35 இலட்சம் மகளிருக்குஉரிமைத் தொகை வழங்கிடும் விதமாக மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வழங்கி ொடக்கி வைத்தார்.
தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் பழையபேருந்துநிலையம் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைதிட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமை தொகைக்கான வங்கிபற்றுஅட்டைகள் வழங்கப்பட்டது.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7.35 இலட்சம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து திட்டத்தினை விரிவாக்கம் செய்து மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடும்பஅட்டைதாரர்கள் எண்ணிக்கை 7.11 இலட்சம் ஆகும். அதில் முகாம்கள் மூலம் முதற்கட்டமாக 3.00 இலட்சம் விண்ணப்பங்களும், இரண்டாம் கட்டமாக 2.23 இலட்சம் விண்ணப்பங்களும் சிறப்புமுகாம்களில் 27,000 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. (கூடுதல் 5.55 இலட்சம் விண்ணப்பங்கள் 83 மூ) இதில் 3.98 இலட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைவழங்கப்பட்டுள்ளது.
தற்போது தஞ்சை மாவட்டத்திற்கு கூடுதலாக 17,000 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சிதுணைமேயர்கள் மரு.அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), தமிழழகன் (கும்பகோணம்),தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.