பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் “மக்கள் நேர்காணல் முகாம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, வரும் 11ம் தேதி (புதன்கிழமை) அன்று திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை சரகம், திருமங்கலக்குடி கிராமத்தில் “மக்கள் நேர்காணல் முகாம்” நடத்திட தஞ்சாவூர், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தவிட்டுள்ளார்.
மேற்படி “மக்கள் நேர்காணல் முகாம்” பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு இதன்மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், 03.092024 (செவ்வாய்க்கிழமை) முதல் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுவதற்கு முன்னரே முன்மனுக்கள் பெறும்பொருட்டு பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை திருமங்கலக்குடி கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்