தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி மகன் ரஞ்சித் (25). இவர் மற்றும் இவரது உறவினர் விஷ்ணு ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு திருவலஞ்சுழியில் கடைத்தெரு வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் சீரஞ்சீவி (23), கணேசன் மகன் அன்பரசன் (30), காமராஜ் மற்றும் இவரது மகன் தேவராஜ் (20) ஆகிய 4 பேரும், அவர்கள் 2 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ரஞ்சித் சுவாமிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீஸார், சீரஞ்சீவி, அன்பரசன், தேவராஜ் ஆகிய 3 பேரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காமராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.