Skip to content
Home » தஞ்சை அருகே வெங்கடேச பெருமாள் கோயிலில் 100 ஆண்டுக்கு பின் திருக்கல்யாணம்…

தஞ்சை அருகே வெங்கடேச பெருமாள் கோயிலில் 100 ஆண்டுக்கு பின் திருக்கல்யாணம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன்மாளிகை ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே சோழன் மாளிகையில் உள்ளது ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத வெங்கடேச பெருமாள்கோயில். இக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கிராம மக்கள் சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் புதியதாக உற்சவர் வெங்கடேச பெருமாள், ஸ்ரீ தேவி, பூ தேவி, பிரதிஷ்டை செய்யப்பட்டு வெகு விமரிசையாக திருக்கல்யாணம் நடைபெற்றது.

நிகழ்ச்சி தொடக்கமாக சீர்வரிசை கொண்டு வருதலும், கொடிமரம் அருகே மாலை மாற்றும் வைபவமும், நலுங்கு வைத்தல் நிகழ்வும், நடைபெற்று அக்னி வளர்த்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள இன்னிசை முழங்க, திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது.

இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறநிலையத் துறை செயல் அலுவலர் ஆறுமுகம், கோவில் நிர்வாகிகள் குமார், அசோகன், மற்றும் பலர் செய்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!