தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழி கீழத்தெரு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீசியாமளாதேவி காளியம்மன் கோயில் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
காப்பு கட்டுகளுடன் திருவிழா தொடங்கப்பட்டு பாலாபிஷேகம் செய்து முதல் நாள் அம்மன் வீதி உலா வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக அரசலாறு ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் பால்குடம், பிரமாண்ட அலகு காவடி, முளைப்பாரி ஆகியவற்றுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், கிராம நாட்டாண்மைகள், கிராமவாசிகள், இளைஞர் மன்றத்தினர்கள் செய்திருந்தனர்.