தஞ்சாவூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் கும்பகோணம் அருகே கொட்டையூரில் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையிலும், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலையிலும் e-Nam எனப்படும் தேசிய வேளாண்மை சந்தை திட்டத்தின் மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் கும்பகோணம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பருத்தி விவசாயிகள் சராசரியாக 928 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ரூட்டி, விழுப்புரம், செம்மனார் கோவில், தேனி, அன்னூர், கொங்கணாபுரம் மற்றும் ஆக்கூர் முக்குட்டு ஆகிய பகுதிகளை சார்ந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.63 இலட்சம் ஆகும். இதில் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7,233, குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,589 சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,769 விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.