தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைப் பெற்றது. ஏலத்திற்கு தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் சரசு தலைமை வகித்தார். விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியாமாலினி முன்னிலை வகித்தார். பருத்தி மறைமுக ஏலத்தில் கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் சராசரி 928 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், செம்பனார் கோவில், தேனி, அன்னூர், கொங்கணாபுரம் மற்றும் ஆக்கூர் முக்கூட்டு உள்ளிட்டப் பகுதிகளைச் சார்ந்த 10 வணிகர்கள் கலந்து கொண்டனர். ஏலத்தில் விற்பனையான பருத்தியின் மதிப்பு சராசரி ரூ 63 இலட்சம். இதில் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.7233, குறைந்தபட்ச விலை ரூ.5589, சராசரி ரூ.6769 என விலை நிர்ணயமானது.
