Skip to content
Home » தஞ்சை அருகே கம்பஹரேஸ்வரர் கோயிலில் 1008 பரத கலைஞர்கள் நடனம்…

தஞ்சை அருகே கம்பஹரேஸ்வரர் கோயிலில் 1008 பரத கலைஞர்கள் நடனம்…

தஞ்சாவூர் மாவட்ம் கும்பகோணம் அருகே திருபுவனத்தில் சர்ப்ப தலமாக விளங்கும் அறம் வளர்த்த நாயகி உடனாய கம்பஹரேஸ்வரர் கோயிலில் பிப்.2ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, சோழர் கால பரதக் கலையைப் போற்றும் வகையில் தருமபுரம் ஆதீனம் இசைக்கல்லூரி சார்பில் கோயில் வளாகத்தில் நேற்று மாலை 1008 பரதக் கலைஞர்கள் விநாயகர், தேவாரம், லலிதாம்பாள் உள்பட 6 பாடல்களுக்கு சுமார் 45 நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடினர்.

இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இச்சாதனையைப்

பெருமைப்படுத்தும் வகையில் தருமை ஆதீன இசைக்கல்லூரிக்கு தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *