Skip to content

பட்டுக்கோட்டை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (80). விவசாயி இவரது மனைவி தவமணி (73). கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். தவமணி இறந்ததிலிருந்து ராமு மிகவும் சோகமாக தனது மனைவி நினைவாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன் மனைவி இறந்ததை நினைத்து விஷமருந்தை குடித்து ராமு மயங்கி விழுந்துள்ளார். அவரை தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராமு இறந்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!