தஞ்சை மாவட்டம், ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு காலை சிற்றுண்டி உணவு திட்ட துவக்க விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் சம்பந்தம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திட்டத்தை தொடக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் லட்சுமி பிரியா, வட்டார வளர்ச்சி
அலுவலர் ஒன்றிய மேற்பார்வையாளர் உத்தம குமார், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கோமளவள்ளி, பஞ்சாயத்து குழு கட்டமைப்பு உறுப்பினர் கவிதா, மக்கள் நல பணியாளர் அறிவொளி, இல்லம் தேடி கல்வி உறுப்பினர் விக்டோரியா, பள்ளி ஆசிரியை வசந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி வரவேற்றார். பள்ளி உதவி ஆசிரியர் மாறன் நன்றி கூறினார்.