மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூரில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செல்வக் குமார் தலைமை வகித்தார். அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் கவியரசன், வலங்கைமான் ஒன்றியச் செயலர் பிரதாப் முன்னிலை வகித்தனர். இதில் கழக துணைப் பொதுச் செயலர் முருகன், மாநில இலக்கிய அணிச் செயலர் செல்வராஜ், திருவாரூர் மாவட்டச் செயலர் பாலச் சந்திரன், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் தமிழ்ச் செல்வன், பேசினர். இதில் அமீரகப் பொறுப்பாளர் ஸ்டாலின் பீட்டர் பாபு, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலர் சீனிவாசன், தலைமைக் கழகப் பேச்சாளர் சுப்பையா, மாநில இளைஞரணி துணைச் செயலர் செந்தில் முருகன், தஞ்சை மாநகரச் செயலர் துரை சிங்கம், மன்னார்குடி நகரச் செயலர் சரவணன், குடந்தை வடக்கு ஒன்றியச் செயலர் சொக்கலிங்கம், சீனிவாசன், அம்மாபேட்டை தெற்கு ஒன்றியச் செயலர் ஜான், ஜெகதீசன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.