தஞ்சாவூர் மாவட்டம் நீலத்தநல்லூர், சந்தைப்புதுத் தெருவில் வசித்து வரும் அன்பழகன் – கனிமொழி தம்பதி 4 வயது மகள் தர்ஷிகா மீது அப்பகுதியிலுள்ள மின் கம்பம் சாய்ந்ததால் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சிறுமி தர்ஷிகா மீது மின்கம்பம் சாய்ந்து கால் எலும்பு முறிந்ததால் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். மேலும், நிலைய மருத்துவரிடம் சிறுமிக்கு தகுந்த சிகிச்சை அளித்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு அசுத்தமாக உள்ள இடத்தை சுத்தம் செய்ய அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார். இதில் கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ. சுதாகர், நிலைய மருத்துவர் பிரபாகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் உடனிருந்தனர்.