தேர்தல் பணிமனையை தஞ்சை எம்பி எஸ்.எஸ். பழனி மாணிக்கம் திறந்து வைத்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினரும், தஞ்சாவூர் எம்எல்ஏவுமான டிகேஜி .நீலமேகம், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, மாநகர செயலாளர் தஞ்சை மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, திருவோணம் முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி மற்றும்
கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் மாநகரத் தலைவர் ராஜேந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் சிலைக்கு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முரசொலி மாலை அணிவித்தார்.