தஞ்சை மாவட்டம், திருவோணத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் அருண் குலத்தான் ( 42) . பூ வியாபாரி.
சம்பவத்தன்று இவர் திருவோணத்தில் இருந்து மினி லாரியில் தஞ்சைக்கு பூக்கள் வாங்குவதற்காக புறப்பட்டார். மினி லாரியை குமரேசன் என்பவர் ஓட்டினார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை மெயின் சாலை தாட்கோ அருகில் மினி லாரி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பாலக்கட்டையில் மோதிக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அருண் குலத்தான், குமரேசன் இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருண் குலத்தானை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து டிரைவர் குமரேசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
