தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் மேயர் சண். ராமநாதன் ஆய்வு செய்தார். அப்போது பாதாள சாக்கடை குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்னைகளை பொதுமக்கள் மேயரிடம் தெரிவித்தனர். மேலும் இப்பகுதி மேடாக உள்ளதால் குடிநீர் சரியாக கிடைப்பதில்லை எனவும் கூறினார். அதற்கு மேயர் இன்னும் 2 மாதத்தில் இப்பகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றார்.
மேலும் மாநகராட்சி அலுவலகத்தில் அடுத்த 3 நாட்களில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக இலவச தொலைபேசி எண் வெளியிட உள்ளதாகவும் அதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்கள் அந்த இலவச எண்ணில் அழைத்தால் மாநகராட்சி அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் பொதுமக்களிடம் அவர் கூறினார்.
மாநகராட்சி பொறியாளர் சேர்மகனி, உதவி பொறியாளர் ஆனந்தி, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி. 11வது வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் உடனிருந்தனர்.