தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள மரப்பட்டறையில் கடந்த பிப்.16ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஓடக்கரை சேர்ந்த தமிழழகன் (30) மற்றும் அவரது மைத்துனர் முத்துக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2.20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..
- by Authour
