தஞ்சை அடைக்கலமாதா நகர் கல்லறைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (60). இவரது மகன் இதயன். மருமகள் ஜெனிஷா (28), பேத்தி ரிஹானா (1). அடிக்கடி கணவருடன் தகராறு ஏற்பட்டு ஜெனிஷா அவரது அம்மா வீட்டுக்கு செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதேபோல் கடந்த 20ம் தேதியும் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஜெனிஷா, குழந்தை ரிஹானாவை தூக்கிக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கும் செல்லவில்லை என்று தகவல் வந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீதர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.