தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள கொந்தகை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் மற்றும் ரூ.1.61 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட நூலக கட்டிடம் ஆகியவை திறப்பு விழா ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் ஓலைப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் விஜய் பிரசாத் வரவேற்று பேசினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், சுதா, ஒன்றிய குழு உறுப்பினர் விஜயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான தாமரைச்செல்வன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நூலக கட்டணம் ஆகியவற்றை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், பாபநாசம் திமுக வடக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் இளையராஜா, கிளை செயலாளர் சேகர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கொந்தகை ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.