தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 58-வது ஆண்டுவிழா,கல்லூரி முதல்வர் டாக்டர் அ.ஜான்பீட்டர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி மாணவப் பேரவையின் துணைத் தலைவரும் ஆங்கிலத்துறைத் தலைவருமான டாக்டர் ரமா பிரியா வரவேற்றார். கல்லூரி முதல்வர் தலைமை உரையாற்றி
ஆண்டறிக்கையை வாசித்தார். தேர்வு நெறியாளர் முனைவர் மலர்விழி முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் தஞ்சாவூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் டாக்டர் நா.தனராஜன் சிறப்புரையாற்றி ஒவ்வொரு பாடப்பிரிவிலும் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.
பேராசிரியர் வெண்ணிலா நன்றியுரை வழங்கினார். நிகழ்வை பேராசிரியர் நிர்மலா தொகுத்து வழங்கினார். 4200 மாணவிகள்,250 பேராசிரியர்கள்,அலுவலர்கள் என பார்வையாளர்கள் உள்ள அரங்கில் விழா சிறப்புற நடைபெற்றது. ஏழுநாட்கள் ஒன்பது விழாக்கள் என நடைபெற்ற கல்லூரி விழாக்களில் இறுதிநாள் நிகழ்வான ஆண்டுவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வரும் துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும் முன்னாள் மாணவியர் சங்கப்பேராசிரியர்களும் இணைந்து விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கல்லூரி மாணவர் பேரவை தலைவர் செல்வி தான்யா துணைத்தலைவர் செல்வி சோனா அகல்யா செயலாளர் ரமா இணைச் செயலாளர் ஜீவா பொருளாளர் விஜயசாந்தி ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்