தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரியும், சென்னை சவீதா பல் மருத்துவக் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டன.
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் அ. ஜான் பீட்டர், சவீதா பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து இரு கல்லூரிகளிம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குந்தவை நாச்சியார் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் சந்திரகலா, சவீதா பல் மருத்துவக் கல்லூரி கல்விப்புல இயக்குநர் தீபக் நல்லசுவாமி ஆகியோர் கையெழுத்து இட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் கூறியதாவது: இந்த ஒப்பந்தம் வாயிலாக இருகல்லூரிகளும் கல்வி, ஆரோக்கியம், ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் சார்ந்த கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றை இணைந்து மேற்கொள்ளும்.
மாணவர்கள், பேராசிரியர்கள் இரு கல்வி நிறுவனங்களின் ஆய்வு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் உடனடி ஆரோக்கிய பிரச்னைகள் தொடர்பான மாநாடுகள், பயிலரங்குகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.