காவிரி மேலாண்மை ஆணையம் மேகத்தாட்டு அணை கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலக்காட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும் ராசியின் மணல் அணை கட்டுமானத்தை துவங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் தஞ்சாவூர் பழைய கோர்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன், போராட்டக் குழு நிர்வாகிகள் பிஅய்யாக்கண்ணு, நாமக்கல் பாலசுப்பிரமணியன், சிவகங்கை எல்.ஆதிமூலம், பயரி எஸ். கிருஷ்ணமணி, சீர்காழி சீனிவாசன், பாலு தீட்சதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து ஊர்வலமாக காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் ஊர்வலமாக சாந்த பிள்ளை கேட் அருகில் உள்ள காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.