முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழிகாட்டுதலில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அறிவுறுத்தலின்படி கர்ப்பிணி தாய்மார்களுக்கான இருதய நோய் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை மீனாட்சி மருத்துவமனை இணைந்து வல்லம் பேரூராட்சி மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்டு இன்று வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் நமச்சிவாய அவர்கள் தலைமையில் ஒரத்தநாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலை வகித்து மதிப்பிற்குரிய எம். ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி இருதய மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி உஷா புண்ணியமூர்த்தி ஒன்றிய குழு தலைவர் கேசவன் ஒன்றிய குழு துணை தலைவர் திரு . அருளானந்த சாமி பேரூராட்சி தலைவர் திருமதி. செல்வராணி கல்யாணசுந்தரம் பேரூராட்சி துணைத்தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வகித்து கலந்து கொண்டார்கள் இந்த முகாமிற்கு மீனாட்சி மருத்துவமனையின் இருதய துறை பேராசிரியர் மரு. சபரி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழு இ. சி.ஜி மற்றும் எக்கோ கார்டியோகிராம் பரிசோதனையை சிறப்பாக மேற்கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட தாய் சேய் நல அலுவலர் செல்வி .புவனேஸ்வரி மற்றும் வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் மரு. அகிலன் அவர்களும் மற்றும் மருத்துவ பணியாளர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் 130 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. இறுதியில் வட்டார மருத்துவ அலுவலர் மரு. அகிலன் நன்றி தெரிவித்தார் இந்த மருந்து முகாம் 17.2.2023 அன்று 6 வட்டாரங்களை சார்ந்த வல்லம் நடுக்காவேரி அம்மாபேட்டை ஒரத்தநாடு தஞ்சாவூர் முனிசிபாலிட்டி ஆகியவற்றிற்கு நாளையும் நடைபெறுகிறது.