தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் ரெட்டிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் உள்புற சாலை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர் ரெட்டிபாளையம் ரோடு அன்னை சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவரின் மகன் மொட்டை மணி என்கிற மணிகண்டன் (37) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் சோதனை செய்ததில் 1.150 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11,500 என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மணிகண்டன் மீது தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி போலீஸ் மற்றும் தெற்கு போலீசில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.